கல்முனை பற்றிமாவில் 9 மாணவர்கள் (9ஏ) சித்திகள் 93 வீதம் சித்தி !


(காரைதீவு நிருபர் சகா)


கிழக்கின் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி (தேசியபாடசாலை)இம்முறை க.பொ.த. சா.தரப்பரீட்சைப்பெறுபேற்றின் பிரகாரம் 93வீத சித்திகளைப்பெற்றுச்சாதனை படைத்துள்ளதாக அதிபர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.

சிறப்புப்பெறுபேறுகளாக 9மாணவர்கள் 9ஏ சித்திகளையும் 8மாணவர்கள் 8ஏ 1பி சித்திகளையும் 13மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும் பெற்று முன்னணியில் உள்ளனர்.

வி.கவிராஜ் ரி.சஞ்சய்காந்த் எஸ்.யுத்திஸ் ஜே.அக்ஷிதா எஸ்.தேவப்பிரியா ரி.கனுஷா ரி.சதுஸ்கா எஸ்.அனுஷிகா ரி.எம்.சமிசபூக் ஆகிய 9மாணவர்களே 9ஏ சித்திபெற்றவர்களாவர்.

226மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 211பேர் சித்திபெற்றுள்ளனர். 93வீதமானோhர் சித்திபெற்றுள்ளதுடன் 91வீதமானோர் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர் என்றும் அதிபர் தெரிவித்தார்.
கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் சித்திவீதம் 2வீததத்தாலும் உயர்தரத்திற்குதகுதியானோர் வீதம் 3வீதத்தாலும் அதிகரித்துள்ளது.

இந்தச்சாதனைக்காக உழைத்த அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கல்விப்பணிப்பாளர்கள் மாகாணகல்விப்பணிப்hளர் உள்ளிட்ட அனைவரையும் பற்றிமா கல்விச்சமுகம் நன்றியுடன் பாராட்டுகிறது.



No comments: