7,661 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது


இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்திற்குள் ஊரடங்கு சட்டத்தினை மீறிய 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 152 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 திகதி முதல் இது வரையிலான காலப்பகுதியில் 62,677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 17,612 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தினை மீறிய 19,586 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் 7,661 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: