லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கரவண்டி விபத்து


(கேதீஸ்), (நீலமேகம் பிரசாந்த்)

தலவாக்கலை டயகம, பிரதான வீதியில் லிந்துலை வைத்தியசாலை அருகில் முச்சக்கரவண்டி ,ஒன்று 26.5.2020, செவ்வாய்கிழமை காலை வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில், பாய்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக, தெரியவருவதாவது எல்ஜின் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி, சென்றுக்கொண்டிருந்த, முச்சக்கரவண்டியே இவ்வாறு வீதியை விட்டு, விலகி சுமார் 100, அடி பள்ளத்தில் பாய்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனை ,செலுத்திய ,முச்சக்கரவண்டி சாரதி, சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்,. முச்சக்கரவண்டியின், சாரதியின், கவனயீனமே இவ்விபத்துக்கு காரணம் என ,தெரிவித்த லிந்துலை, பொலிஸார், இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, மேற்கொண்டு, வருகின்றனர்.

No comments: