ஆலையடிவேம்பில் தற்காலிக வர்த்தக நிலையங்கள் இடமாற்றம்


-அகத்தியன் செய்திப்பிரிவு-

ஆலையடிவேம்பு பிரதேசத்தில கொரோனா வைரஸ் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினாலும் பிரதேச செயலகம், பிரசே சபையினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சாகாம வீதியில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக நிலையங்கள் அனைத்தும் தர்மசங்கரி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஊரடங்கு சட்டமானது தற்காலிகமாக தளர்த்தப்படும் போது மக்கள் தங்களது அத்தியாவசிய  தேவைகளை தர்மசங்கரி மைதானத்தில் மாற்றப்பட்டுள்ள உள்ள தற்காலிக வர்த்தக நிலையங்கள் ஊடாக பூர்த்தி செய்ய கூடியதாக இருக்கும் எனவும் இதன்போது மக்கள் முகக்கவசங்கள் அணிவதுடன் சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறும்  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.எஸ்.அகிலன் தெரிவித்துள்ளார்.



No comments: