கல்முனையில் சிகையலங்கார நிலையங்களுக்கு செல்வோர் போர்வை கொண்டு செல்லவும் !
சாலூன் கடைக்குச் செல்வோர் போர்வை கொண்டு செல்லவும்
கல்முனையில சிகையலங்கார நிலைய உரிமையாளர்களுக்கான சுகாதார விழிப்புணர்வு
கல்முனை வடக்கு சுகாதாரப்பணிமனைக்குட்பட்ட சிகையலங்கார உரிமையளார்களுடனான சுகாதாரப்பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அலுவலகத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கல்முனை வடக்கு சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெரின் உட்பட பொதுச்சுகாதாரப்பரிசோதககள் மற்றும் கல்முனைப் பிரதேசத்தில் சிகையலங்கார நிலையங்களை நடத்திவரும் சிகையலங்கார உரிமையாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
கல்முனைப்பிரதேசத்தில் சிகையலங்கார நிலையங்களுக்கு வருபவர்களது சுகாதரப்பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு சிகையலங்கார உரிமையாளர்கள் பின்வரும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும்.
அதற்கமைய
கை கழுவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும், தலைமுடிமட்டும் வெட்டப்படவேணடும், தாடிவழித்தல் மற்றும் மசாஜ் போன்ற ஏனைய அழகுபடுத்தல் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும், முடிவெட்டும் உபகரணங்கள் தொற்று நீக்கம் செய்யப்படவேண்டும், முடிவெட்டுபவர்கள் தங்களுக்கு மேல் போர்க்கும் போர்வைத்துணியைக் கொண்டுவருதல் வேண்டும், அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும், சமூக இடைவெளி பின்பற்றப்படவேண்டும், போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் கல்முனை வடக்கு சுகாதாரப்பிரிவினரால் வழங்கப்பட்டது.
குறித்த சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடக்காத சிகையலங்கார நிலையங்களுக்கு எதிராக சுகாதாரப்பிரிவினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்முனை வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் ஆர்.கணேஸ்வரன் தெரிவித்தார்.



No comments: