ஒலுவில் இடைத்தங்கல் முகாமில் 52 நபர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை


அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் இடைத்தங்கல் முகாமில் உள்ள 52 கொரோனா சந்தேக நபர்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் கு.சுகுணன் தலைமையில்  இன்று 2020.04.20 கொரோனா பரீசோதனை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பரிசோதனையில் வைத்தயர்களான ஆலையடிவேம்புசுகாதார வைத்திய அதிகாரி  டாக்டர்.அகிலன்  ,டாக்டர்.மதன்,  டாக்டர்.ஆரிஸ்,  டாக்டர்.ஸ்மாயில் டாக்டர்.ரிஸ்னி , ஆகியாருடன் ஆலைவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காியலய தாதி உத்தியோகத்தர் லதா மற்றும் அட்டாளைச்சேனை, ஒலுவில் வைத்தியசாலை தாதி உத்தியோகத்தர்களும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காியலய சாரதி ஜமீல் ஆகியோரும் பரிசோதனையின் போது பங்கு பற்றியதாகவும்.  மேலும் இப் பரிசோதனை மாதிரிகள் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் இதன் முடிவுகள் 03 நாட்களின் பின்னர் கிடைக்கப் பெறும் எனவும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் தெரிவித்தார்.

மக்களின் பாதுகாப்பிற்காக சுயநலம் கருதாமல் பாடுபடும் சுகாதாரத்துறை மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பணிப்பாளர்கள், தாதியர்கள், மற்றும் அனைத்து சுகாதாரததுறை ஊழியர்களுக்கும் அகத்தியன் செய்தி சேவை தனது மனமார்ந்த மரியாதைகளை தெரிவித்துக் கொள்கின்றது.





No comments: