ஊரடங்கு சட்டத்தினால் நாட்டை மூடவேண்டிய நிலை தற்போது இல்லை -சுகாதார அமைச்சர்


கொரோனா வைரஸ் மக்கள்மத்தியில் பரவுவதை தடுக்க முடிந்ததாகவும் இதனால் நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தனது தனிப்பட்ட நம்பிக்கை என கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் பெரியளவில் பிரச்சினைக்குரிய நிலைமையாக மாறி வருகிறது. தினமும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை மூடி வைக்க வேண்டும் என நான் நம்பவில்லை.

மக்கள் மத்தியில் நோய் பரவுவதை தடுக்க முடிந்துள்ளதுடன் தற்போது சுமார் ஒரு மாத காலமாக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு நாட்டை ஓரிடத்தில் வைத்துள்ளோம்.

மக்களுக்கு நோய் பரவாத அளவுக்கு நிலைமை இருப்பதால் நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டு வருவது குறித்து சிந்திக்க தற்போது காலம் வந்துள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடுள்ளதாகவும்

மொத்த தேசிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை மூடி வைத்திருக்கும் நிலையில் இருந்து நாட்டை மீட்க வேண்டும் என நான் தனிப்பட்ட ரீதியில் நம்புகிறேன் எனவும் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்

No comments: