கல்முனை பொலிஸரால் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி - சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கல்முனை பொலிஸார் இன்று (17) கைது செய்தார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்கு மரக்கறி வியாபாரிகள் போன்று சூட்சு பமாக சென்று சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 20 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலத்தில் இவர் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.


No comments: