காரைதீவில் நடமாடும் வைத்தியசாலை அம்புலன்சில் மருந்துவிநியோகம்.
(காரைதீவு நிருபர் சகா)
காரைதீவில் கொரோனப்பீதி காரணமாக வைத்தியசாலைக்குவரமுடியாத கிளினிக்நோயாளர்களுக்கு அவரவர் வீட்டுவாசலிற்கு மருந்துப்பொருட்களை கொண்டுசென்று வழங்கப்பட்டுவருகிறது.
ஒருமாத காலத்திற்குத்தேவையான மருந்துப்பொருட்களை பாதுகாப்பு முறைப்படி அம்புலன்சில் இருந்தவாறு உரிய அட்டையைப்பெற்று வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கிவருகின்றார்கள்.
இது தொடர்பானஅறிவித்தல்கள் கடந்த மாதம் ஊர்பூராக ஒலிபரப்புச்செய்யப்பட்டிருந்தது.
இந்த நடமாடும் வைத்தியசேவையையிட்டு பொதுமக்கள் வைத்தியசாலை நிருவாகத்திற்கு நன்றிதெரிவித்துள்ளனர்.




No comments: