வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள மாணவர்கள் இலங்கை வருகை !


கொவிட்-19 தொற்று காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் அமர்தசரஸ் நகரிலிருந்து இன்றைய தினம் வானுர்தி மூலம் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

அத்துடன் நாளைய கோயம்புத்தூரில் இருந்து 117 இலங்கை மாணவர்களும்
நாளைய தினம் நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 93 மாணவர்களும் நாட்டிற்கு அழைத்துவரப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்தியா  பாகிஸ்தான் நேபாளம் ஆகிய நாடுகளில் நிர்க்கதியாகியுள்ள 443 மாணவர்களும் இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விஷேட வான் போக்குவரத்துக்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கன் வானுர்தி சேவை தெரிவித்துள்ளது.

No comments: