ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் எதிர்வரும் 30ம் திகதி வரை ரத்து !


ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான பயணிகள் சேவைகளை தற்காலிகமாக ஏப்ரல் 30வரை இடைநிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் எனவும் தேவையேற்படின் சிறப்பு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அருகில் உள்ள ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸின் 24 மணி நேர தொடர்பு நிலையத்தின் +94117771979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLanka, #lka, #Covid_19  #Coronavirus

No comments: