ஊரடங்கு சடடத்தினை மீறிய குற்றச்சாட்டில் 24 மணி நேரத்திற்குள் 687 பேர் கைது !


ஊரடங்கு சட்டத்தை மீறிய 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 186 வாகனங்களும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியிலே குறித்த எண்ணிக்கையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்களும்

இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 36 ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 9 ஆயிரத்து 201 வாகனங்கள் காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே நாட்டு மக்கள் எமக்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை மீறி செயற்படாமல் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு ஆதரவளித்து தேசிய பாதுகாப்பிற்கு இடமளிக்க வேண்டும்.

No comments: