கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 238 அதிகரிப்பு !


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளதாகசுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை எண்ணிக்கை அதிகரித்தமைக்கு காரணம் என்றும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வர் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்களில் இருவர் யாழ். பலாலி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் கண்காணிக்கப்பட்டவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: