இலங்கையில் ஒரே பிரிவைச்சேர்ந்த 12 கிராமங்கள் முடக்கம் !


இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக சுகாதாரப்பிரிவினால் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதனடிப்படையில் பொலன்னறுவை  இலங்காபுர பிரதேச சபைக்குட்பட்ட 12 கிராமங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் இனங்காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதிகளில் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

No comments: