பூகோளத்தின் அவசரநிலை இனம் கண்டுள்ளது - நசீர் அஹமட்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 63 சதவீதமான மக்கள் காலநிலை மாற்றத்தை 'பூகோளத்தின் அவசரநிலையாக இனம் கண்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். 

இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடரபில் மக்கள் போதியளவில் இல்லையென்று இளம் தலைமுறையினர் கவலை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிய பசுபிக் பிராந்திய இளைஞர்கள் போரம் அமைச்சர்கள் மற்றும் சூழலியல் அதிகாரிகளுக்கான போரமாக நேற்று 01 ஆம் திகதி ஐ.நா அலுவலக முன்றலில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் ஆசிய பசுபிக் பிராந்தியமானது அதன் சுற்றாடல் பிரச்சினைகளைக் கையாள இளைஞர்களின் பங்களிப்பை அவசியமாகவும் அவசரமாக வேண்டி நிற்பதாவும் தெரிவித்த அவர் அந்த வகையில் இந்த போரம் ஒரு மைல் கல்லாக அமைவதாகவும தெரிவித்தார்

நிலை பேராண்மை அற்ற உற்பத்தி மற்றும் பயன்பாடு என்பனவற்றால் ஏற்பட்டுள்ள சுற்றாடல், சமூக, மற்றும் பொருளாதார பிரச்சினை களை நாடுகள் எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித் தார்.


No comments: