𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் அன்பின் முக்கியத்துவம் செயற்றிட்டம் உமிரி கிராமத்தில் இடம் பெற்றது.

நேற்றைய தினம்  𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் அன்பினை விதைக்கும்  செயற்றிட்டம்  உமிரி சங்கமன் கிராமத்தில் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையில் மேற்  கொள்ளப்பட்டது.

திருக்கோவில் சேவற்கொடியோன் அமைப்புடன் இணைந்து தாண்டியடி உமிரி, திருப்பதி போன்ற கிராமங்களை உள்ளடக்கிய வகையில் இது இடம் பெற்றது.

இதன் போது  மாணவர்களுக்கான பாட புத்தகங்கள்,பரிசுப் பொருட்களையும் சேவற்கொடியோன் அமைப்பினர் வழங்கி வைத்திருந்தனர்.

அத்துடன்   𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் நிர்வாக உறுப்பினர் "தனு" தனது பிறந்த நாளை முன்னிட்டு கிராம மக்களுக்கான மதிய உணவினை  𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினூடாக வழங்கி வைத்திருந்தார்.

எதிர்கால சந்ததியினர் ஆகிய சிறுவர்களிடையே இயற்கையில் அன்பையும் பிடிப்பையும் ஏற்படுத்தும் வகையில் மரம் நடுகைநிகழ்வும் இதன் போது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் மாணவர்கள் அனைவருக்கும் பாடப்புத்தகம் வழங்கியதுடன் கிராமத்தில் உள்ள மாணவர்களது திறமைகள்,ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நாடாத்தி பரிசுகளும் அமைப்பினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிறுவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் வகையில் சிறுவர் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் என்பன நடாத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பின் கலை கலாச்சார நிகழ்வுகளுக்கு பொறுப்பாக இருக்கும் நிறோஷ் தலைமையிலான விழிப்புணர்வு நாடகமும் அரங்கேறி கிராம மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது

அமைப்பினர் மூலமாக அன்பின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.

அன்பு இல்லாமல் போனது தான் உலகின் பல இடங்களிலும் இன்றைக்கு நிலவி வரும் அமைதியின்மைக்குக் காரணம் என்று நினைக்கிறோம்.

அது போலத் தான் நாம் நம் அன்றாட வாழ்வில் செய்யும் சிறு அன்பான செயலும் கூட யாரோ ஒருவரின் வாழ்க்கை வெற்றிக்குக் காரணமாக இருக்கும்.

இந்நிகழ்வு சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த சேவற்கொடியோன் அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளர் உறுப்பினர்கள் மற்றும் உமிரி_சங்கமன் கிராம அறநெறி பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த 𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினர் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டனர்

“எது விதைக்கிறோமோ அதுவே விளையும்” என்பது அறிவியல் மட்டுமல்ல அனுபவவியலும் தான். நாம் அன்பை மட்டுமே விதைப்போம். நிச்சயம் அதற்கு ஈடாய் பேரன்பைத் தாராளமாய் அறுவடை செய்யலாம்.

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்திலிருந்து மதிப்பிற்குரிய குமாரதாசன் ஐயா அவர்கள் அன்பின் முக்கியத்துவம் பற்றியும் அறியாமையைப் போக்கும் வகையில் சொற்பொழிவை நிகழ்த்தியிருந்தார்.
 
மேலும் இதன் போது  சைவநெறிக்கூடம் அமைப்பினரும்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.























No comments: