தனியார் பேருந்தில் நடந்த பரபரப்பால் பெண் மீது கத்திக்குத்து


குருணாகல் கல்கமுவவில் இருந்து எம்போகம நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அத்தேடுவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்கமுவ ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

51 வயதுடைய குசுமாவதி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கத்திக்குத்துக்குள்ளாகியுள்ளார்.

60 வயதுடைய கல்லாவ பகுதியைச் சேர்ந்தவரே தாக்குதலை நடத்தியவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மூன்று வருடங்களாக உறவில் இருந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் நான்கு லட்சம் ரூபாவை ஏமாற்றிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: