பிறப்பு சான்றிதழில் மாற்றம்

இலங்கையில் குழந்தைப் பிறப்பைப் பதிவு செய்யும் போது பெற்றோர்கள் திருமணமானவர்கள் என்ற தகவலை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

தாய் தனியாக வாழக்கூடிய தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அது சங்கடத்திற்குரிய விடயம் அல்ல எனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.

குழந்தைக்கு ஏதேனும் அனர்த்தம் ஏற்படப் போவதாகத் தெரிந்தால் அல்லது குழந்தையை பராமரிக்க முடியவில்லை என்றால் 1929 என்ற தொலைபேசி அழைப்பிற்கு அழைக்குமாறு ஒவ்வொரு பெண்ணும் இந்த தொலைபேசி எண்ணை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கருக்கலைப்பு ஒரு நல்ல விடயம் என்று தனிப்பட்ட முறையில் தான் நம்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments: