வெளிநாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் காணாமல் போயுள்ளார்

ஐக்கிய அரபு நாட்டிற்கு வீட்டுபணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக நேற்றைய தினம் (07)அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளனர் .

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டுக்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார்.

4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்து வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்தாக குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.


எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்க மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் .

 No comments: