நித்திரையில் இருந்த இளைஞன் தாக்கப்பட்டு உயிரிழப்பு

இன்று (07) பிற்பகல் 2.20 மணியளவில் களுத்துறை பலதொட்ட வீதி, தேக்கவத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியிலுள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் புகுந்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் கழுத்தில் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 27 வயதுடைய இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுருத்த தனஞ்சய டி சில்வா எனப்படும் சந்துன் என்று அழைக்கப்படும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments: