மட்டக்களப்பு வாவியில் இளைஞனின் சடலம் மீட்பு!
(க.சரவணன்)
மட்டக்களப்பு வாவியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியில் இன்று (16) திகதி மாலை குறித்த இளைஞன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ.சுதர்சன் என அடையாளம் காணப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவரது சடலம் இன்று மட்டக்களப்பு வாவியில் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments: