பெண்களிடம் மோசடியாக பணம் பெற்ற நபர் கைது
பெண்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹல்லொலுவ பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் பெண்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், ஆபாச செய்திகள் மற்றும் காணொளிகளை அனுப்பி தகாத முறையில் நடந்து கொண்டதோடு பண மோசடயிலும் ஈடுபட்டதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: