கசிப்புக் காய்ச்சிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளுராட்சிமன்ற வேட்பாளர் கைது

திறப்பனை பிரதேசத்தில் 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர்.  உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் வேட்பாளரே கசிப்புக் காய்ச்சியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை சோதனையிட்ட போது சந்தேகநபர் கைதானதாக தெரிவித்தனர்.

3750 மில்லி லீற்றர் கசிப்பையும் மற்றும் 180,000 மில்லி லீற்றர் கோடாவையும் கைப்பற்றி குறித்த நபரை நீதிமன்றத்தில்  ஒப்படைக்கவுள்ளனர்.

No comments: