இலங்கையில் முதன்முறையாக புலம்பெயர் பறவைகள் சரணாலயம்! நாளை திறக்கப்படுகின்றது.

 


கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.

“ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (20) ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

ஹந்தானை தேயிலை அருங்காட்சியக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த 27 ஏக்கர் புலம்பெயர் பறவை பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பிடமாக உள்ளது.

வெளிநாடுகளுக்குச் சொந்தமான பறவைகள், புலம்பெயர் பறவைகள் போன்றவற்றை உள்ளடக்கிய பூங்காவில், காயமடைந்த பறவைகளுக்கு சிகிச்சை அளித்து விடுவிக்கும் பிரிவும் உள்ளது.

490 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள இந்த பறவை பூங்காவில் வெளிநாட்டு பறவைகள் பெரிய கூண்டுகளில் அடைத்து வைக்கபட்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணிகளுக்கு சுமார் நூறு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

40 ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளை ஆய்வு செய்து இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

No comments: