கண்டி நகரில் பலத்த பாதுகாப்பு

 


இலங்கையில் 75வது சுதந்திர தின நிகழ்விற்கு ஒத்ததாக கண்டியில் இன்று குடியரசு ஊர்வலம் நடைபெறவுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வீதியூடாக இந்த ஊர்வலம் பயணிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால், கண்டியில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களின் ஆலோசனையின் பிரகாரம், ஸ்ரீதலதா மாளிகையின் தியவடன நிலமே உள்ளிட்ட தேவாலய நிலமேகளின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வீதியூடாக இன்று மாலை 6.30க்கு ஆரம்பமாகும் இந்த ஊர்வலம், தலதா வீதி, யடிநுவர வீதி மற்றும் ரஜ வீதி ஊடாக பயணிக்கவுள்ளது.

இந்த ஊர்வலகத்திற்காக உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கண்டி நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, கண்டி நகர் முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முப்படையினர், விசேட அதிரடிபடையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட 3000திற்கும் அதிகமான பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments: