பாட புத்தகம் வினியோகம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 4.5 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாடபுத்தகங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஆரம்ப வகுப்பு மற்றும் 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களை பகிர்ந்தளிக்க முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments: