இன்று முதல் மின்வெட்டுக்கு அனுமதி இல்லை...PUCSL

இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு இடமளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 அதன்படி, அந்த நாட்களில் இலங்கை மின்சார சபை கோரும் மின்வெட்டுக்கு இடமளிக்க மாட்டோம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 இந்த நாட்களில் நடைபெறும் உயர்தரப் பரீட்சைக்காக தொடர் மின் விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.No comments: