திருக்கோவில் பகுதியில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு செயற்றிட்டம்
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை மாணவர்கள் மத்தியில் தடுக்கும் விழிப்புணர்வு செயற்றிட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலைய சிறுவர் மகளிர் பிரிவுப் பொறுப்பதிகாரி கே.விஜிதா தலைமையில் இன்று நடை பெற்றது.
திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் குறித்த விழிப்புணர்வு செயற்றிட்டமானது வெற்றிகரமாக பாடசாலை நிர்வாகத்தினரின் ஒத்துளைப்புடன் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் பாடசாலை மாணவர்கள் போதை பொருளில் இருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் சிறுவர் மகளிர் பாதுகாப்பு அதற்குரிய சட்டப்பிரிவுகள் தண்டனைகள் போன்ற விடயங்கள் இச் செயற்றிட்டத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு தெரியப்பதுத்துவதுடன் முக்கியமாக போதைப்பொருள் பவனை தொடர்பில் ஏற்படும் எதிர்கால விளைவுகள் கல்வியில் செலுத்தும் தாக்கம் தொடர்பிலலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
ஜேகே.யதுர்ஷன்










No comments: