படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலம், அண்ணாமலையை விளாசிய காயத்ரி

கடந்த 2 மாதங்களில் 3 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலம் என காயத்ரி ரகுராம் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

 இதுகுறித்து பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் எல்லோரும் அவரவர் நியாயத்தை பேசுவதற்கு கட்சி வாய்ப்பு கொடுக்கும் போது என்னை மட்டும் ஏன் கார்னர் செய்கிறார்கள் என தெரியவில்லை. 

என் மீதான வெறுப்பு இப்போதுதான் வந்ததா இல்லை முன்பிருந்தே இருக்கிறதா என தெரியவில்லை. 

இதற்கு முன்பு அண்ணாமலை ஒரு வன்மமான விஷயத்தை சொல்லியிருந்தார். அதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் கேட்டிருப்பீர்கள். மதன் ரவிசந்திரனுடனான ஆடியோவில் அவர் என்ன பேசியிருந்தார். 

காயத்ரியும் குஷ்புவும் என் அறைக்கு வந்தால் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவே நான் கண்ணாடி கதவை வைத்தேன் என கூறியிருக்கிறார்.


No comments: