திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் இன்று காணி "கச்சேரி"
அரசகாணிகளில் குடியிருந்து பயிர் செய்யும் மக்களுக்கு ஆவணம் வழங்கு வதற்கான ஆரம்ப கட்ட விசாரனையானது (காணிக்கச்சேரி) திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் இன்று இடம் பெற்றது.
2008/04 காணி ஆணையாளர் நாயக சுற்று நிருபத்திற்கு அமைவாக அரச காணிகளில் காணி ஆவணம் இன்றி குடியிருப்போர் மற்றும் மேட்டு நிலப்பயிர் செய்து வாழ்வாதாரத்தை மேற்கொள்வோருக்கான காணி ஆவணங்கள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் விசாரணையாக இது மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள விநாயகபுரம் 03 பிரிவில் வாழும் மக்களுக்கான விசாரணை இன்றைய தினம் இடம் பெற்றது.
விசாரணையின் முடிவில் அரச காணியில் உண்மையாக வாழ்வாதாரத்தை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த நபர்களுக்கான காணி ஆவணமானது பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் என்று திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தெரிவித்தார்.
குறித்த காணி தொடர்பான விசாரணையின் போது திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் க.சதிசேகரன் காணி உத்தியோகத்தர்களாகிய திரு.P.கோவிந்தசாமி திருமதி.T.லோஜினி,மற்றும் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணிக்கச்சேரிகளை நடத்தி மக்களுக்கு காணி ஆவணங்களை வழங்கிய வரிசையில் கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று வருடங்களாக திருக்கோவில் பிரதேச செயலகம் முன்னிலை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
படங்கள் (யதுர்ஷன்)







No comments: