உர விற்பனை மூலம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் !
யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்ததன் மூலம் விவசாய அபிவிருத்தி திணைக்களம் கடந்த ஆண்டு சிறு போகத்தில் மற்றும் இவ்வருட பெரும் போகத்தில் 10.05 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த பணம் திறைச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக குறித்த பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த அரசாங்கத்திற்கு வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.

No comments: