கரையோரப் பாதை புகையிரதப் போக்குவரத்து ஸ்தம்பிதம்.
கரையோரப் பாதையில் இயக்கப்படும் புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளது. தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் இன்ஜின் தடம் புரண்டதே இவ்வாறான ஸ்தம்பித நிலைக்கு காரணம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பாதையில் தெற்கு களுத்துறைக்கும் பயாகலைக்கும் இடையில் புகையிரத சேவை இடம் பெறாது என்றும் இன்ஜினை சீராக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments: