தேசிய விருதினை பெற்றது திருக்கோவில் பிரதேச செயலகம் !

"சமூக பாதுகாப்பு ஓய்வுதிய திட்டத்திற்கான"  அதிகளவான பயனாளிகளை உருவாக்கியமைக்காக தேசிய விருதினை திருக்கோவில் பிரதேச செயலகம் 2022 ல் முதலாவது தடவையாக பெற்றுள்ளது 

குறித்த தேசிய விருதுக்காக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல பிரதேச செயலகங்கள் போட்டியிட்டிருந்தன அவற்றில் 18 பிரதேச செயலகங்கள் தேசிய ரீதியில் விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த 18 பிரதேச செயலகங்களில் திருக்கோவில் பிரதேச செயலகமும் ஒன்றாகும்.

இதற்கு முன்பே தேசிய ரீதியில் அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையில் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியின் 2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் திருக்கோவில் பிரதேச செயலகம் செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தினைப் பெற்றிருந்தது.

மேலும் கடந்த 3 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் அதிகமாக காணி கச்சேரிகளையும், அதிகமான காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கியதில் தொடர்ந்தும் திருக்கோவில் பிரதேச செயலகம் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments: