பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம்...

 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து திரு.ஜனக ரத்நாயக்கவை நீக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

 இதன்படி, ஆளும் கட்சி எம்.பி.க்கள் குழு பாராளுமன்றத்தில் பிரேரணையை சமர்ப்பிக்க தயாராக உள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இடமளிக்க மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


 மின்சாரக் கட்டணத் திருத்தம் செய்தால் நாளொன்றுக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படும் எனவும் மின்சார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 மின்வெட்டை நீடிக்கக் கூடாது என்றும், மின் கட்டணத்தை திருத்துவதற்கு பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அனுமதிக்காவிட்டால், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 அதன்படி, இது தொடர்பான முன்மொழிவை உருவாக்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.




No comments: