திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நீரிணைப்பு வழங்கப்பட்ட பயனாளிகளின் விபரங்களை பரிசீலினை செய்வதற்கான கூட்டம்
பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் மூலம் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் நீரிணைப்பு வழங்கப்பட. தெரிவுசெய்யப்பட்டுள்ள பயனாளிகளின் விபரங்களை பரிசீலினை செய்வதற்கான கூட்டம் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் தலைமையில் இன்றைய தினம் (05) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பற்றது.
இந்நிகழ்வில்
உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் திரு.R.W.கமல்ராஜன் நீர் வழங்கல் அதிகாரசபையின் திருக்கோவில் அலுவலக முகாமையாளர் திரு S.கமலகாந்தன் மற்றும் பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் திட்ட அதிகாரி திரு.K.சத்தியன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தெரிவுசெய்யப்பட்ட பயனாளர்கள் என பலரும் கலந்தகொண்டனர்.





No comments: