விடுதியில் தங்கியிருந்த நபர் சடலமாக மீட்பு

அம்பலாங்கொடை ரந்தொம்பேயில் உள்ள விடுதியில் பெண் ஒருவருடன் தங்கியிருந்த பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் இன்று (31) பிற்பகல் அறையொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய ரத்கமவைச் சேர்ந்த பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் சுகாதார அலுவலக உதவியாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments: