இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கை விஜயம்.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.  ஜெயசங்கர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கையின்  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெயசங்கருடன்  இந்த விஜயத்தில்  மேலும் 4 அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் உதவிகளை வழங்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.No comments: