தேர்தல் செலவு ஒழுங்குமுறை சட்டமூலம் நிறைவேற்றம்..தேர்தல் ஒத்திவைப்பு..?

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

விவாதத்தின் மூன்றாவது வாசிப்பின் முடிவில் ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி, சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்த நிலையிலேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  


No comments: