பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் சுகாதார அமைச்சர் பலி.
தனது பாதுகாப்புப் படையை சேர்ந்த காவல்துறை அதிகாரியால் சுடப்பட்ட இந்தியாவின் ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
60 வயதான நபா கிஷோர் தாஸ் என்ற மாநில அமைச்சரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று (29) ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டம் பிரஜ்ராஜ்நகர் நகரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்தபோது துப்பாக்கியால் சுடப்பட்டார்.
அவரைப் பாதுகாப்பதற்காக அங்கிருந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் அமைச்சரின் இதயம் மற்றும் இடது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் காரில் இருந்து இறங்கும் போது மாநில அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அதிக இரத்தப்போக்கு காரணமாக அரச அமைச்சர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாநில அமைச்சரின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே கொலையை செய்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள உதவி சப்-இன்ஸ்பெக்டர் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, குறித்த உதவி உப பொலிஸ் பரிசோதகர் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், உதவி பொலிஸ் பரிசோதகர் அமைச்சருடன் தனிப்பட்ட பகைமை கொண்டிருக்கவில்லை என அவரது மனைவியை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடந்த போது நேற்று காலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் தனது மகளுடன் வீடியோ கால் செய்ததாக அவரது மனைவி உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களின் கமெராக்களில் பதிவாகியிருந்தன.
No comments: