மட்டு அம்பாறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது

(கனகராசா சரவணன் )

அக்கரைப்பற்றில் நீதவான் வீட்டு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் பல வீடுகளை நீண்டகாலமாக உடைத்து கொள்ளையிட்டு வந்த குணாகுழு என்ற பெயரில் இயங்கிவந்த குணா என அழைக்கப்படும் பிரபல பாதாள கோஸ்டியைச் சோந்த பிரதான சூத்திரதாரியான குணசீலன், பெண் ஒருவர் உட்பட 4 பேரை  திங்கட்கிழமை (16) களுதாவளை பகுதியில் வைத்து நவீனகர கைதுப்பாகி ஒன்று மற்றும் கைக்குண்டுடன் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீட்டு யன்னலை உடைத்து அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு அங்கிருந்து தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் தொடர்பா காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் குறித்த கொள்ளையன் தலைமறைவாகிய நிலையில் அவரை கைது செய்ய முற்படடபோது அவர் பொலிசாரை நோக்கி துப்பாகிசூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

அதேவேளை அக்கரைப்பற்றில் பல வீடுகள் உடைத்து தாலிகொடிகள் உட்பட சுமார் 30 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை மற்றும் களுவாஞ்சிக்டியில் கடந்த வருடம் வர்த்தகர் ஒருவரின் வீடு உடைத்து அங்கிருந்து 80 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளை சம்பவங்கள் தொடர்பான பிரதான சூத்திரதாரியான குணா உட்பட அவரின் குழுவைச் சேர்ந்தவர்களை பொலிசார் தேடிவந்துனர்.

இந்த நிலையில சம்பவதினமான இன்று பகல் களுதாவளையிலுள்ள அவரது வீட்டில் வந்திருப்பதாக பொலிசாருக்கு தகல் கிடைத்ததையடுத்து பொலிசார் உடனடியாக அந்த வீட்டை சுற்றுவளைத்து முற்றுகையிடடனர் இதன் போது குணா மற்றும் பெண் ஒருவர் உட்பட 4 பேரை நவீனகர கைதுப்பாகி ஒன்று மற்றும் கைக்குண்டுடன்கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட ஆறுமகத்தான்குடியிருப்பைச் சேர்ந்த அரூஸ், சசிகுமார், களுதாவளையைச் சேர்ந்த குணா, ராகினி ஆகியவர்கள் எனவும் இவர்கள் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.No comments: