2023 சனிப்பெயர்ச்சி பலன்மீனம் ராசியினருக்கு எவ்வாறு அமையும்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். பலருக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்கும் நீங்கள் அதிகம் ஆசைப்பட மாட்டீர்கள். எல்லோரையும் எளிதில் நம்பும் நீங்கள் எதிலும் அமைதியை விரும்புவீர்கள். முன்னுக்குப் பின் முரணாக யோசித்து புதுமையை புகுத்துவீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இப்போது ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்.
ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம். தற்சமயம் விரய வீட்டில் வந்து அமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாக பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.

கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்கவழக்கங்களிலிருந்து மீட்பீர்கள்.
அவர்களின் விருப்பங் களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழி சொத்து வந்து சேரும். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள்.

வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
தடைபட்ட குலதெய்வ பிரார்த்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்சினை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.

No comments: