வானிலை தொடர்பில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் அறிவிப்பு
தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் மெதுவாக இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
திருக்கோவில்

No comments: