எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு ?


நாட்டிற்கான டீசல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை தனியார் பெற்றோல் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டின் பல எரிபொருள் நிலையங்களில் வைத்தியசாலை,பாதுகாப்பஞ மற்றும் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே டீசல் விநியோகிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை மேலும் ஒருவார காலத்திற்கு போதுமான பெற்றோல் இருப்பில் உள்ளதாகவும் தனியார் பெற்றோல் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலதிகமாக மசகு எண்ணெய் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சை மேற்கொள்காட்டி தகவல்கள் வௌியாகியுள்ளன.


Post a Comment

0 Comments