ஆலையடிவேம்பு சின்ன முகத்துவாரம் பகுதியில் ஒருவர் வெட்டி கொலை
(க.சரவணன்)
![]() |
கூகிள் மேப் புகைப்படம் |
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் பக்கத்து வீட்டாருடன் நீண்டகால குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் ஒருவரை கோடாரியுடன் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சோர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள பொத்துவில் பிரதான வீதியிலுள்ள சென்யோன்ஸ் பாடசாலைக்கு முன்னால் உள்ள இரு குடும்பங்களுக்குள் நீண்டகாலமாக குடும்பத்தகராறு இடம்பெற்று பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்றுவருகின்றது.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 8.15 மணிக்கு பொத்துவில் பிரதான வீதியில் இரு குடும்பங்களக்குள் எற்பட்ட வாய்தர்க்கம் முற்றியதையடுத்து கோடாரியால் ஒரு நபர் மற்றைய நபரால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளார் .
இதனையடுத்து கோடாரியால் தாக்குதல் நடாத்திய 36 வயதுடைய ஒருவரை பொலிசர் கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்..
No comments: