ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு விடாது - வி. ஆனந்தசங்கரி

 (கனகராசா சரவணன்)


பிரதமர் ரணில் இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எங்களை பட்டினியாக கிடக்க எங்கள் தாய்நாடு இந்தியாவும் எமது சகோதரங்களும் விடாது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். பஞ்சம் வராமல் பார்க்க கூடிய மனப்பான்மை இந்தியாவுக்கு இருக்கின்றது என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்லடியிலுள்ள உல்லாச விடுதியில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இன்று நாடு மிக மோசமான நிலையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க போக கூடாது ஒருவருக்கு ஒருவர் வஞ்சம் தீர்க்க போகக்கூடாது யாராவது நல்ல சிந்தனை தெரிவித்தால் அதனை எல்லோரும் பகிர்ந்து கொள்ள கூடிய கடமை இருக்கின்றது எனவே மக்களுடைய தேவையை உணர்ந்து நாட்டுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

நாட்டில் இன்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்ற நேரத்தில் அரசியலில் ஒரு ஒற்றுமையை கொண்டுவரக் கூடிய நிலமையை உருவாக்கியிருக்க வேண்டும். எனவே ரணில் அல்ல எவர் இந்த பதவிக்கு வந்தாலும் அதைதான் தெரிவிப்பேன். இந்த பிரச்சனையை தனியாக தீர்க்க முடியாது 

ஜுன் மாத்தில் உணவு பஞ்சம் ஏற்படப் போவதாக பிரதமர் ரணில் தெரிவிப்பது அவர் கோணத்தில் சரியாக இருக்கலாம் என்னுடைய கோணத்தில் இருந்து பார்க்கும் போது அது பிழையாக தெரிகின்றது எங்களுடைய எல்லா விடையங்களுக்கும் எதிர்பார்ப்பது எங்களுடைய தாய்நாடான  இந்தியைவை எனவே நாங்கள் இந்தியாவுக்கு சொல்ல தேவையில்லை இந்தியா தானாக செய்யக்கூடிய விடையங்களை செய்து வருகின்றது 
தமிழ் தலைமைகளுக்கு இராஜதந்திரம் தெரியாது வாயைக் கொடுத்து பழுதாக்குகின்றனர்.  எனவே நல்லது கெட்டது இந்தியாலுக்கு தெரியும் மகாத்துமாகாந்தி காலத்தில் மாகாத்மா காந்தி இலங்கையும் இந்தியாவுத் சண்டை பிடிக்க இயலாது என சொல்லிவைத்து சென்றுள்ளார்.

எனவே அனுபவரீதியாக பார்த்தால் சுனாமி காலத்தில் முதல் முதலில் இந்திய மருத்துவதுறையின் உடனடியாக வந்து செயற்பட்டார்கள் இவ்வாறு பல நெருக்கடியான நிலையில் இந்தியா உடன் வந்து உதவி புரிந்துள்ளது எனவே நாங்கள் கேட்காமல் முதல் வருவது இந்தியா தான். ஆகவே இரண்டு மாதத்தில் பஞ்சம் ஏற்படப் போவதாக மக்களை பயப்படுத்தாமல் உற்சாகம் ஊட்டவேண்டும். 

ஊடகங்களுக்கு ஒரு புனிதமான கடமை இருக்கின்றது எது சரியோ அதை மக்களுக்கு தெரியப்படுத்துவது சில ஊடகங்கள்  குத்தகைக்கு சிலரை வளர்க்கின்ற மனப்பான்மையை கைவிடவேண்டும் ஊடகவியலாளர்களுக்கு ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரத்தை அதனை கட்டளையாக ஏற்று இனமத பேரம் இல்லாமல் நாட்டின் நன்மை கருதி செயற்படவேண்டும்.

தமிழ் விடுதலை கூட்டணி ஆரம்பிக்கும் போது என்ன மனப்பான்மையுடன் கொள்கைகளை கொண்டிருக்கின்றதே அதே செயற்பாட்டில் எந்த விதமான மாற்றமும் இல்லை சிலர் தமது சுயநலத்துக்காக சிலர் திட்டமிட்டு கட்சியை அப்படி கொண்டுவந்துள்ளனர் ஆனால் கட்சி கட்சியாக தான் இருக்கின்றது தலைமை புனிதத்துவமாகவும் இருக்கின்றது எனவே மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.

கட்சியின் தலைவர் என அண்மைகாலமாக சிலர் தங்களை தாங்களபக அறிவித்தனர் இது ஒரு ஜோக், கூட்டி கழித்து பார்த்தால் அவர்கள் உறுப்பிர்கள் கூட இல்லை 10 பேர் போலி  பணவைப்பு பற்றுசீட்டுன் 2021 ஆண்டு உறுப்பினராக அங்கத்துவம் கேட்டுள்ளனர். சுருக்கமாக சொல்லப் போனால் தாங்கள்தான் கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கட்சியை அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்பட்டனர். 
விடுதலைப் புலிகள் காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை திட்டமிட்டு அழித்தமாதிரி நிலமையை கொண்டுவந்தவர்கள் அதனை மட்டக்களப்பு மறுமலர்ச்சி கழகம் காப்பாற்றி வைத்தது 

அந்த நேரத்தில் மறுமலர்ச்சி கழகம் செய்த பணி மறக்க முடியாத பணி அவர்களது முயற்சியின் படி போயிருந்தால் 2004 ம் ஆண்டு ஏப்பிரல் 2ம் திகதி தேர்தல் முடிந்த அன்று நாடு சுதந்திரம் அடைந்த மாதிரி எல்லோரும் சம உரிமையோடு வாழக்கூடிய வாய்ப்பை விடுதலைப் புலிகளின் ஆதரவோடு தீர்வு கண்டிருக்கும் ஆனால் துரஸ்டமாக யுத்தம் 6 ஆண்டு தொடர்ந்தது.

அந்த 6 ஆண்டு எத்தனையே அனர்த்தங்கள் நடக்கும் போது காப்பாற்ற வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள்  காப்பாற்றாமல் வாய்திறக்காமல் ஒளித்திருந்ததுடன் அரைவாசிபேர் வெளிநாட்டில் இருந்தார்கள். 

அப்போது நான் வன்னியில் 3 இலச்சம் மக்கள் இருப்பதாக ஜனாதிபதி மகிந்தவிடம் தெரிவித்தேன் அப்போது அவர் சத்தம் போட்டு கத்தினார் உனக்கு யார் சொன்னது என்று பின்னர் நான் சொல்லித்தான் அங்கு 3 இலச்சம் மக்கள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்தார் 

எனவே இந்த 3 இலச்சம் பேரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் அந்த யுத்த காலத்தில் இந்தியாவில் 22 பேர் தீக்குளித்தனர் ஆனால் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட இராஜினாமா செய்ததில்லை இந்த 3 இலச்சம் உயிருக்கும் மானிடஜாதிகள் பெறுப்பேற்க வேண்டும்

நான் எழுதிய 6 கடிதத்தில் ஒன்றையாவது படித்திருந்தால்  இது நடந்திருக்காது துரஸதவசமாக கட்சிக்கு கட்சி ஊடகத்துக்கு ஊடகம் ஓரு இணைப்பு இல்லாதது எல்லோரும் கும்பலில் கோவிந்த என்று இப்போ அரோகரா என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம். ஏன்றார். 

No comments: