அமைச்சு பதவிக்கு மறுத்த கட்சிகள் : புதிய அமைச்சரவை மொட்டுடன் ?


நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து புதிய அமைச்சர்களை பொறுப்பேற்க கட்சி பேதமின்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி புதிய அரசாங்கத்தில் எதுவித அமைச்சு பொறுப்புக்களையும் ஏற்பதில்லை என ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தது.

இதேபோன்று உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார் கட்சியின் தலைவர் பா.உ மைத்திரிபால சிறிசேன கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டமையின் அடிப்படையில் தாம் ரணில் விக்ரமசிங்கவுடனான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என அறிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏசுமந்திரன் கடசியின் நிலைப்பாடடின் அடிப்படையல் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என தமது கட்சி  நிலைப்பாட்டை விளங்கினார்.

மேலும். உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கர, விமல் வீரவங்ச உள்ளிட்டோர் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்து. (அகத்தியன்)

Post a Comment

0 Comments