இராணுவத்தளபதியின் முக்கிய அறிவிப்பு

பொது மக்களிடையே பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒருபோதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்தி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதன் மூலம் பொதுமக்களைத் தூண்டிவிட முயற்சி நடப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ தெரிவித்திருந்தார்.

அதற்பு பதிலளிக்கையிலேயே இராணுவத் தளபதி ஜெனரல் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், இந்த தவறான அறிக்கையை இலங்கையின் முப்படைகளும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments