விடுதியில் தண்ணீர் மின்சாரத்தை தடை - நீதி கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பில் சம்பவம்

 


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தில் விடுதிகளில் உள்ள மாணவர்கள் வெளியே போகவிடாமாலும் வெளியில் இருந்து மாணவர்கள் வளாகத்திற்கு செல்லவிடாது வாசல் தகவை நிர்வாகம் இன்று திங்கட்கிழமை (02) காலை 9 மணிக்கு  பூட்டியதுடன் விடுதியில் தண்ணீர் மின்சாரத்தை தடை செய்துள்ளதையடுத்து நீதி கோரி  மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் 

குறித்த பல்கலைகழகத்தில் கடந்த 29 ம் திகதி இரு மாணவர்களை விரிவுரையாளர் தாக்கிய சம்பவத்தையடுத்து அங்கு விரிவுரையாளரை தடுத்துவைத்து மாணவர்கள் நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் குறித்த பிரச்சனை தொடர்பாக ஒருவாரத்தில் தீர்வு பெற்றுத்தரப்படும் என பல்கலைகழக நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதையடுத்து போரட்டம் கைவிடப்பட்டது 

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றது அதில் உடனடியாக மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேறவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவே மாணவர்கள் உடனடியாக வெளியேறமுடியாத சூழல் இருக்கின்றது பொருளாதாரப் பிரச்சனை உட்பட வாகனப் பிரச்சனைகள் இருக்கின்றது

இதனால் வந்து மாணவர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக இன்று காலை கூடிசுமூகமான தீர்வை பெற்றுக் கொள்ளதீர்மானித்த நேரத்தில் இந்த வாசல்கதவை பூட்டி இந்த அராஜக செயற்பாடுகளை நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை மிகவும் கண்டிக்கின்றோம்.

அதேவேளை விடுதியில் மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை நிறுத்தியுள்ளதுடன உள்ளுக்கு உள்ள மாணவர்கள் வெளியில் செல்ல முடியாது வெளியில் உள்ள மாணவர்கள் உட்செல்ல முடியாது தகவை பூட்டு போட்டு பூட்டியுள்ளனர் இதனால் சாப்பாட்டிற்கு போகமுடியாது நிலை ஏற்பட்டுள்ளதுடன் உள் உள்ள மாணவர்கள் மலசலம் கழிக்க கூட முடியாதா இந்த நிர்வாகத்தின் அராஜகம் கண்டிக்கப்படுவதுடன் ஒவ்வொரு மாணவர்களுக்கும் நீதியை நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும் என மாணவர் சங்க தலைவர் வி.சுரேந்திரன் தெரிவித்தார்

இதேவேளை மாணவர்கள் தொடர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு பூட்டிய கதவின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் 


Post a Comment

0 Comments