முட்டை ஒன்றின் விலை அதகரிக்கும் சாத்தியம் ?



கிராமிய விவசாயிகள் முட்டை ஒன்றுக்காக 31 ரூபாயை செலவிடுகிறார்கள். எனினும் 20 - 21 ரூபாயை செலுத்தியே விவசாயிகளிடமிருந்து முட்டையைப் பெற்றுக்கொள்கிறார்கள் என இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மூட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென்பதுடன்  இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்தியின்போது கோழி உணவுக்கு தேவையான இரசாயனங்களில் வெறும் 3 இராசயனங்களே உள்ளநாட்டில் காணப்படுகிறது. ஏனைய 11 இராசாயனங்களும் வௌிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுகிறதாகவும் தெரிவித்தார்.




 

No comments: