அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான மேற்பார்வை இன்று


அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் புதிதாய் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு  இன்றையதினம் வைத்தியசாலையினை பார்வையிட்டு எதிர்காலத்தில் வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யும் முறைமைகளை வைத்தியசாலை DMO அவர்களுடன் ஆலோசித்தது.

மேலும் குறித்தவைத்தியசாலையானது பழம்பெரும் வரலாற்றை கொண்டமைந்துள்ளதுடன் அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்கான அனைத்து வித வைத்திய தேவைகளையும் கொண்டமைந்த வைத்தியசாலையாகும்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச வைத்தியசாலைகளில் மிகவும் பெரியளவிலான வைத்தியசாலையாக அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: